ராபர்ட் மாஸ்டர் ஏங்கிக் கிடக்க கமலிடம் ‘அந்த’ வார்த்தையை சொன்ன ரச்சிதா

November 7, 2022 at 3:55 pm
pc

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு ரச்சிதா மகாலட்சுமி மீது ஒரு ஃபீலிங்ஸ் வந்துவிட்டது. ஹவுஸ்மேட்ஸை பிரபலம், நிருபராக மாறி பேட்டி எடுக்க வைத்தார் கமல் ஹாசன். ரச்சிதாவை பார்த்து ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ராபர்ட். அவர் உங்களிடம் ஏதாவது சொல்ல வருவது போன்று தெரிகிறதா என்று மேலும் கேட்டார். இதை சற்றும் எதிர்பாராத ரச்சிதா வெட்கப்பட்டு சிரித்து மழுப்பிவிட்டார்.

லவ் யூ

ஐ லவ் யூ ராபர்ட் என்று ரச்சிதா சொல்வார் என ராபர்ட் மாஸ்டர் எதிர்பார்க்கிறார். ஆனால் அது மட்டும் நடக்கவே இல்லை. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனின் பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடினார்கள். ஹவுஸ்மேட்ஸுக்காக கேக் அனுப்பி வைத்தார் கமல். மேலும் பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்தார்கள்.

கமல்

கேக் வருது, பிரியாணி வருது என்று பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சந்தோஷத்தில் கமலை பார்த்து லவ் யூ சார், லவ் யூ என்று தெரிவித்தார் ரச்சிதா. நாளைக்கு புதன்கிழமை என்பது போன்று ஐ லவ் யூ சொல்வது சாதாரணமாகிவிட்டது. அதனால் ரச்சிதா சொன்னதை கேட்டு மனமுடைந்துவிட வேண்டாம் மாஸ்டர். இது வேற அன்பு. ஆங்கிலத்தில் எல்லாத்துக்கும் லவ் யூனு சொல்றாங்க என ராபர்ட் மாஸ்டருக்கு அவரின் ஆதரவாளர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

லவ் யூ என்கிற வார்த்தையை கேட்க ராபர்ட் மாஸ்டர் ஏங்கிக் கிடக்க கமலை பார்த்து சொல்லியிருக்கிறார் ரச்சிதா. ராபர்ட் மாஸ்டருக்கு தன் மீது காதல் இருப்பது ரச்சிதாவுக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் அது பற்றி மனம் திறந்து பேசாமல் நழுவிக் கொண்டே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website