ருசியான அவல் பகாளாபாத் செய்வது எப்படி …?

November 7, 2022 at 7:33 am
pc
தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப்,
கெட்டி அவல்,
பால் – தலா அரை கப்,
தயிர் – ஒரு கப்,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்).

அலங்கரிக்க:

கேரட் துருவல்,
உலர் திராட்சை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை,
உடைத்த முந்திரித் துண்டுகள் – தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அவல், பச்சரிசி இரண்டையும் கழுவிக் களைந்து அரை கப் பால், 2 கப் தண்ணீர்விட்டு குழைய வேகவிடவும்.
வெந்ததும் உப்பு, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றால் அலங்கரிக்கவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website