லியோ இசை வெளியிட்டு விழா நடக்குமா?

September 14, 2023 at 8:57 pm
pc

மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையி, இரண்டாவது பாடல் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

வெளிநாட்டில் நடக்கும் என முதலில் கூறப்பட்ட நிலையில், அங்கு அனுமதிக்க கிடைக்காததால், தற்போது சென்னையிலேயே நடத்த படக்குழு திட்டமிட்டனர்.

வழக்கம் போல் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லையாம். இதற்குப்பின் எதாவது அரசியல் இருக்குமா என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரு வேலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்றால், லீலா பேலஸ் அல்லது வேறு இடங்களில் இசை வெளியிட்டு விழாவை நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website