லியோ ஐமேக்ஸ் பிரீமியர் காட்சிகள் திடீர் ரத்து. சோகத்தில் ரசிகர்கள் .

October 16, 2023 at 6:34 pm
pc

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் ஐமேக்ஸ் தொழில் நுட்பம் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர்.

மேலும் அமெரிக்காவில் வரும் 18ஆம் தேதி ஐமேக்ஸ் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீரென ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த படம் அமெரிக்காவில் வெளியாகவில்லை என்று கூறியதை அடுத்து ஏற்கனவே முன் பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

குறித்த நேரத்தில் படக்குழுவினர் ஐமேக்ஸ் பிரதியை தரவில்லை என்றும் அதனால் தான் காட்சி ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஐமேக்ஸ் தியேட்டர்களில் ‘லியோ’ படத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இருப்பினும் மற்ற திரையரங்குகளில் ‘லியோ’ திரைப்படம் எந்தவித பிரச்சனையும் இன்றி, அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website