லியோ படத்தை பார்க்கவிருக்கும் அஜித் குமார்

October 3, 2023 at 6:34 pm
pc

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படம் என்ற பெருமையை இந்த படம் பெரும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தமிழ் திரை உலகை சேர்ந்த பலர் திரையரங்குகளில் பார்க்க குவிந்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் படப்பிடிப்பை தொடங்க இருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போது இருவரும் அஜர்பைஜானில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’லியோ’ திரைப்படத்தை அஜித் மற்றும் த்ரிஷா உள்பட ’விடாமுயற்சி’ படக்குழுவினர் படக்குழுவினர் வரும் 19ஆம் தேதி துபாய் திரையரங்கில் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் நடந்தால் இது குறித்த புகைப்படங்கள் சமூக வளாகத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website