லியோ படப்பிடிப்பை முடித்த மிஷ்கின்; படக்குழுவுக்காக போட்ட பதிவு

February 27, 2023 at 2:26 pm
pc

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் புரோமோ சமீபத்தில் வெளியாகி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றனர். லியோ படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் முதன்மையாக உள்ளது. 

இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இணையத்தில் வைரலாகின. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. படப்பிடிப்பும் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், லியோ படத்தின் மிஷ்கின் சார்ந்த பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இதுக்கு முன்னதாக மிஷ்கின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் லியோ படக்குழு சார்ந்து பதிவிட்டுள்ளார். இப்பதிவு அவரின் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 

minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட Leo படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். Leo திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website