லியோ ப்ரோமோஷனை வெளிநாட்டில் நடத்த திட்டம்

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ விழாவை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் ‘லியோ’ படத்தின் புரமோஷன் விழா பிரமாண்டமாக நடத்தப்படும் என தயாரிப்பாளர்கள் லலித் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த விழா துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர் ‘லியோ’ படம் குறித்து அவர் பேசும் இரண்டு நிமிட வீடியோ இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற விஜய்யின் டயலாக்கை ரசிகர்கள் விரைவில் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட ‘லியோ’ படத்தின் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்காக நேரடியாக தொலைக்காட்சி அல்லது இணையதளங்களில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் ஆடியோ விழா ரத்தானதால் அதிருப்தியில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.