லோகேஷ் கனகராஜ் படத்தில் உறியடி இயக்குனர் விஜயகுமார்!

December 31, 2022 at 8:29 am
pc

மாநகரம் படத்தின் மூலம் முத்திரை பதித்து, பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் தற்போது விஜய்யுடன் கைகோர்த்துள்ள லோகேஷ் தளபதி 67 பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் வெளியாகும் என கூறப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரையுலக நண்பர்களில் ஒருவர் இயக்குனரும் நடிகருமான விஜயகுமார். இவர் உறியடி எனும் படத்தை இயக்கியுள்ளார்.

மாநகரம் படத்தை முடித்த கையோடு விஜயகுமாரை வைத்து படம் இயக்குவதாக இருந்தாராம் லோகேஷ். ஆனால், தொடர்ந்து பெரிய படங்களின் வாய்ப்பு கிடைத்ததால் அது நடக்காமல் போய்விட்டது.

இதனால், தான் எழுதிய கதையில் தன்னுடைய துணை இயக்குனரை வைத்து விஜயகுமாரை இயக்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். இதனை சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website