வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்!

June 26, 2023 at 5:45 pm
pc

பிரதம மந்திரி விவசாய நிதியுதவி பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது. விவசாய நிதிஉதவி திட்டம் பிரதம மந்திரி விவசாய நிதிஉதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி வருகிறது. எனவே இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- பிரதம மந்திரி விவசாய உதவித்தொகை திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 11,229 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயனடைய இ-கே.ஒய்.சி., மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் 3,067 பயனாளிகள் இ.கே.ஒய்.சி. முடிக்காமலும், 1467 பயனாளிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ளனர்.

தற்போது தபால் நிலையங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட ஜீரோ இருப்பு கணக்கு தொடங்க முன்வந்துள்ளது. எனவே விடுபட்ட விவசாயிகள் www.pmkisan.gov.in இணையதளத்தில் ஓ.டி.பி., உள்ளீடு செய்து தங்கள் பெயரை இணைத்து கொள்ளலாம் அல்லது இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள் மற்றும் பி.எம். கிசான் செயலி மூலமாகவும் இணைக்கலாம். இதுதொடர்பாக 4 வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இதன்படி ஊட்டி வட்டாரத்தில் நாளை (திங்கட்கிழமை) ஊட்டி இத்தலார் வேளாண் கிடங்கு அலுவலகத்திலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மஞ்சூரில் தாசில்தார் அலுவலகம், 28-ந் தேதி தும்மனட்டி, சோலூர், கடநாடு சமுதாயகூடம், ஊட்டி ரோஜா பூங்கா கூட்ட அரங்கம், 29-ந் தேதி பாலகொலா சமுதாயகூடம், 30-ந் தேதி எப்பநாடு, நஞ்சநாடு, உல்லத்தி சமுதாயகூடம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

குன்னூர் வட்டாரத்தில் நாளை (திங்கட்கிழமை) எடப்பள்ளி, மேலூர் கிராம சமுதாய கூடம், 27-ந் தேதி அதிகரட்டி சமுதாய கூடத்திலும், கோத்தகிரி வட்டாரத்தில் நாளை (திங்கட்கிழமை) கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், அரவேணு பஞ்சாயத்து அலுவலகம், 27-ந் தேதி நெடுகுளா சமுதாய கூடம், கம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், பேரகணி சமுதாய கூடம், 28-ந் தேதி கீழ்கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகம், சோலூர்மட்டம் வி.ஏ.ஒ. அலுவலகம், கெங்கரை சமுதாய கூடத்தில் முகாம்கள் நடைபெறுகிறது.

வட்டாரத்தில் நாளை (திங்கட்கிழமை) தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், செமுள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 27-ந் தேதி பந்தலூர் தாசில்தார் அலுவலகம், மூனனாடு, பி.பி.சி., அய்யன்கொல்லி, 28-ந் தேதி நெலாக்கோட்டை, பாட்டவயல் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website