வசூல் ராஜா தளபதி விஜய்தான் !!வாரிசு திரைப்படம் அதிக தொகைக்கு விற்பனை…

November 3, 2022 at 8:25 pm
pc

விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்யுடன் முதன் முதலாக ராஷ்மிகா ஜோடியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இருக்காது என்றும், சற்று வித்தியாசமானதாக இருக்குமென்றும் தகவல்கள் வருகின்றன. இதனை கேட்ட ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகின்றது. தற்போது இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகின்றதாம். மிகப்பெரிய தொகைக்கு இப்படம் அனைத்து ஏரியாக்களிலும் விற்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என ரசிகர்கள் முதல் சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்கள் வரை அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website