வடிவேலுவின் அந்தரங்க விஷயத்தை வெளியிட்ட பிரபலம்!

May 23, 2023 at 6:58 am
pc

வைகைப்புயல் வடிவேலு மதுரைக்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் தான் சொந்த ஊர்காரர் என்று ராஜ்கிரண், விஜயகாந்த் போன்ற பிரபலங்கள் வடிவேலுக்கு சினிமாவில் பல உதவிகள் செய்தனர். வடிவேலு தனது உடல்மொழி மற்றும் நகைச்சுவையால் முக்கிய இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் மாதம் ஒருமுறை வடிவேலு தனது சொந்த ஊரான மதுரைக்கு பிளைட்டில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த பழக்கம் இப்போது வந்ததில்லை. அவர் சினிமாவில் ஒரு நல்ல நிலை அடைந்ததிலிருந்து தற்போது வரை இதுதொடர்ந்து வருகிறது. மதுரை மற்றும் மதுரையை சுற்றி எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் தனது அம்மாவை சந்தித்துவிட்டு தான் வடிவேலு வருவாராம்.

ஆனால் எப்போதுமே வடிவேலு மதுரைக்கு செல்லும் போது காரில் செல்ல மாட்டாராம், பிளைட்டில் தான் செல்வாராம். அதுமட்டுமின்றி தனது மனைவி, குடும்பத்துடன் செல்வதை தவிர்த்து விடுவாராம். இதற்குப் பின்னால் மிக முக்கிய காரணம் இருப்பதாக சினிமா பிரபலம் ஒருவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது மதுரைக்கு தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு வந்தாலும் வடிவேலு அவர்களை முன்னாடியே ஒரு பிளைட்டில் அனுப்பி வைத்து விடுவாராம். அதன் பிறகு இவர் மட்டும் தனியாகத்தான் வேறு ஒரு பிளைட்டில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளதாம்.

அதாவது தனியாக செல்லும் போது தான் மது அருந்திவிட்டு ஜாலியாக செல்லலாம் என்பதனால் வடிவேலு இவ்வாறு செய்கிறாராம். மேலும் தனக்கு பிடித்த நபருடனும் அந்த பிளைட்டில் செல்வாராம். இதற்கு குடும்பம் தடையாக இருக்கும் என்பதால் அவர்களை பெரும்பாலும் அழைத்துச் செல்வது இல்லையாம்.

வடிவேலுக்கு நடிப்பில் பல திறமை இருந்தாலும் இவ்வாறு சில வீக்னஸ் இருக்கிறது என அந்த சினிமா பிரபலம் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால் வடிவேலு ரசிகர்களோ அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என சிலர் இவ்வாறு சதி செய்து அவதூறு கிளப்பி வருவதாக கூறுகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website