வந்தாச்சு டக்கரான ‘பீர்’ பஸ் சேவை.. சென்னை டூ புதுச்சேரி சுற்றுலா பயணிகள் படு குஷி..

April 12, 2023 at 11:30 am
pc

புதுச்சேரி நகர் பகுதியில் எங்கு பார்த்தாலும் விதவிதமான மது கடைகள் மது அருந்தும் வசதியுடன் வாருகள் அமைந்துள்ளன. மேலும் அது பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக விளங்கி வருவதால் தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அதுவும் வார விடுமுறையை கொண்டாட அருகிலுள்ள தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் வருகை தருவர். அதன் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை புதுச்சேரி கடற்கரைகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு புதுப்புது வசதிகள்
அதிலும் குறிப்பாக மது பிரியர்கள் விதவிதமாக பீர்களை வாங்கி குடித்து பொழுதை கழிக்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவே பல்வேறு வசதிகள் புதுச்சேரியில் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த கட்டமாக உணவு சாப்பிடும் ரெஸ்டாரண்டுகள், பாரம்பரிய வீடுகள் அனைத்திலும் சுற்றுலா என்ற பெயரில் ரெஸ்ட்ரோபார்கள் திறக்க அரசு தாராளமாக அனுமதி அளித்து வருகிறது.

பீர் பஸ் சேவை
அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு மது பிரியர்களுக்காகவே முதல் பீர் பஸ் இயக்கப்பட உள்ளது. வருகிற 22 ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

தலா ஒரு நபருக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும், பலவிதமான சாப்பாடு வகைகளை சாப்பிட்டுக் கொண்டே புதுவையை சுற்றி பார்த்துவிட்டு அன்றைய தினமே சென்னைக்கு திருப்பி விடலாம். இந்த பீர் பஸ் சேவைக்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இது குறித்து நிறுவன ஏற்ப்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது, இந்த பேருந்தை பீர் பஸ் என அழைப்பதால் பேருந்தில் குடிப்பது என யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் பேருந்தில் மது குடிக்க அரசு அனுமதி இல்லை.

எனவே புதுவையில் அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பேருந்து நிறுத்தப்படும். அந்த இடத்தில் பீர் அருந்த அனுமதிக்கப்படும். 

சென்னையில் இருந்து சுமார் 40 சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பி விடலாம். அன்றாட பணிகளில் மூழ்கி கிடப்பவர்கள் வார விடுமுறையில் ரிலாக்ஸ் ஆக உற்சாகப்படுத்தி புதுப்பித்துக் கொள்ள இந்த சுற்றுலா உதவும் என தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website