வயிறு குலுங்க சிரிக்க வைத்த தளபதியின் 6 படங்கள்!

March 7, 2024 at 8:30 pm
pc

ஒருவரை ஏன் பிடிக்கு எதற்கு பிடிக்கிறது என்று காரணமே சொல்ல முடியாது என்று சொல்வார்கள். இந்த லிஸ்டில் நடிகர் விஜய்யும் இடம்பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் தட்டு தடுமாறி வந்த விஜய் போகப்போக மாஸ் படத்திலும், ஆக்சன் படங்களிலும் பின்னி பெடல் எடுத்து விட்டார். அத்துடன் காமெடியும் பண்ணி ரகளை செய்து பார்ப்பவர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: கே செல்வ பாரதி இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு நினைத்தேன் வந்தாய் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ரம்பா, தேவயானி, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் கனவில் வரும் ரம்பாவை தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று அலப்பறை செய்வார். அதே மாதிரி தேவயானியை கல்யாணம் பண்ணும் சூழ்நிலை வரும் பொழுது அவரை கேள்வி கேட்டு மடக்க வேண்டும் என்று செய்யும் அக்கப்போருக்கு ஒரு அளவே இருக்காது.

மின்சார கண்ணா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு மின்சார கண்ணா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், குஷ்பு, ரம்பா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது குஷ்புவின் வீட்டிற்குள் நுழைந்து எப்படியாவது அவருடைய மனதை மாற்றி தங்கையுடன் திருமணத்தை பண்ணிக் கொள்ள வேண்டும் என்று குடும்பத்துடன் வந்து செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் குசும்புத்தனமாக தான் இருக்கும்.

பத்ரி: அருண்பிரசாத் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு பத்ரி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், மோனல், விவேக், ரியாஸ்கான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது விஜய் எப்படியாவது மாடலாக இருக்கும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதால் அதற்கேற்ற மாதிரி பல பொய்களை சொல்லுவார். அதன் பிறகு அந்த விஷயங்கள் தெரிந்ததும் மாட்டிக்கொள்வார். கடைசியில், தான் விரும்பும் பெண்ணை விட தன்னை விரும்பும் பெண்ணுடன் இணைந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று முடிவு எடுத்து விடுவார்.

வசீகரா: கே செல்வபாரதி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வசீகரா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சினேகா, வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் விஜய் கேரியரிலே ஒரு காமெடி படம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க நகைச்சுவையும், வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார். அதுவும் வடிவேலுடன் சேர்ந்து கொண்டு இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. அந்த வகையில் இவருடைய காமெடிக்கு முன் வடிவேலு ஒன்னும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கைத்தட்டலை பெற்றிருக்கிறார்.

பிரண்ட்ஸ்: சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் காதல், ரொமான்ஸ், நட்பு மற்றும் நகைச்சுவை என அனைத்துமே வைத்து ஒரு கமர்சியல் படமாக ஹிட் அடித்து இருக்கிறது. போதாக்குறைக்கு வடிவேலுடன் சேர்ந்து விஜய் படம் முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு நகைச்சுவை கொடுத்திருப்பார்.

சச்சின்: இயக்குனர் ஜான் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சச்சின் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் ஒரு கல்லூரி இளைஞனாக அட்ரஸ்சிட்டி பண்ணும் அளவிற்கு குதூகலமான நடிப்பை கொடுத்திருப்பார். முக்கியமாக இதில் ஹீரோயினியை சீண்டும் அளவிற்கு குசும்புகளை பண்ணி ரசிக்க வைத்திருப்பார்.

இது போன்ற நிறைய படங்கள் விஜய் கேரியரில் மறக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் கில்லி படத்தை இன்னும் ரசித்துப் பார்க்கலாம். அந்த அளவிற்கு காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்து நடிப்பை கொடுத்திருப்பார். அதனால் தான் பெண்கள் முதல் குழந்தைகள் வரை இவரை பிடித்து விட்டது. போதாக்குறைக்கு இவரோடு இருக்கும் டான்ஸ், ஸ்டைல் இதெல்லாம் தான் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website