வரிச்சியூர் செல்வம்.. கை, கால்கள் இல்லாத நபர்களுக்கே 2 3,பொண்டாட்டி இருக்கும் போது….கலகல பதில்!

February 21, 2023 at 6:12 pm
pc

மதுரையில் ஒரு காலத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் வரிச்சியூர் செல்வம். ஏகப்பட்ட குற்ற வழக்குகள், சிறை தண்டனை, குண்டாஸ் என அட்ராசிட்டிகளுக்கு பஞ்சமின்றி அரங்கேற்றினார். 

கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டல், கொலை என லிஸ்ட் பெரிதாகி கொண்டே சென்றது. என்கவுன்ட்டர் வரை சென்ற நிகழ்வுகளும் இருக்கின்றன. ஒருகட்டத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கையால் அமைதியான வாழ்க்கையை நோக்கி திரும்பினார்.

முன்னாள் ரவுடி

இனிமேல் ரவுடி வாழ்க்கையே வேண்டாம் என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இருப்பினும் கிலோ கணக்கில் நகைகள் அணியும் பழக்கத்தை மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. சுமார் 200 பவுன் நகைகள் உடன் கிட்டதட்ட ஒரு நகைக்கடை போல தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். மதுரையில் உள்ள தனது வீட்டில் பொழுதை கழித்து வருகிறார்.

பாஸ்போர்ட் கிடைக்கவில்லை

தினசரி வாக்கிங், உடற்பயிற்சி கூடம், சினிமா, பேரன் – பேத்திகள் உடன் பொழுதை கழித்தல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றி வருதல் என நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் இன்னும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றை வாய்தா வாங்காமல் விரைவாக முடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.

நெட்டிசன்கள் ரகளை

அனைத்தும் முடிந்து விட்டால் தன்னை லண்டன், அமெரிக்கா என வெளிநாடுகளில் தான் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வரிச்சியூர் செல்வத்தை கன்டென்ட் ஆக மாற்றி நெட்டிசன்கள் ரகளை செய்து வருகின்றனர். இவரை கோமாளியாக்கி மீம்ஸ்கள், ட்ரால்கள் என சமூக வலைதளங்கள் ஆர்ப்பரித்து வருகின்றன. இதை அவரே பலமுறை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வரிச்சியூர் செல்வம் காதலி

சமீபத்தில் செய்தியாளர்களிடம் இவர் பகிர்ந்து கொண்ட பல விஷயங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. உங்களின் காதலி யார்? என கேள்வி எழுப்பினர். அதற்கு, என் பொண்டாட்டி தான் காதலி என்று பதிலளித்தார். இனியும் காதலி சமாச்சாரங்களை வைத்து கொள்வது சரியாக இருக்காது. பேரன், பேத்திகள் வந்து விட்டார்கள். இந்த வயதில் காதலியா? லவ்வா? என என்னை கேள்வி கேட்பார்கள்.

சொல்லாத சீக்ரெட்

தற்போது எனக்கு 55 வயதாகிறது. மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஆசைகள் இருக்கும். கை, கால்கள் இல்லாத நபர்களுக்கே 2 பொண்டாட்டி, 3 பொண்டாட்டி இருக்கும் போது இப்படி சோக்கா இருக்கிறவனுக்கு எத்தனை பொண்டாட்டி இருக்கும்னு நீங்களே சிந்திச்சுக்கோங்க. அதை நானே சொல்லக் கூடாது எனக் குறிப்பிட்டார்.

சிறை வாழ்க்கை

மேலும் பேசுகையில், சிறை வாழ்க்கை மிகவும் கொடூரமானது. எதிரிக்கு கூட சிறை வாழ்க்கை கூடாது என நினைக்கிறேன். ஏனெனில் இது நரகம் போன்றது. கறியும், சோறும் போடுவார்கள் எனக் கூறுவர். அப்படி எதுவும் பெருசா போட மாட்டார்கள். சிறையில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வேன்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website