வழுக்கை விழுவதற்கு இதுதான் காரணமா?

November 18, 2023 at 9:58 pm
pc

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தற்காலத்தில் தலைமுடிப் பிரச்சினை காணப்படுகின்றது. முகத்தின் அழகை பிரதிபலிப்பதில் தலைமுடிக்கு மிகப் பெரும் பங்கு காணப்பகின்றது. நாம் தலைமுடி பராமரிப்புக்காகக் காலம் காலமாக பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. என கூறினால் மிகையாகாது.

தற்போது ஆண்களை பெருத்தவரையில் இளவயதிலேயே பல பேருக்கு வழுக்கை விழ ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் ஏற்படும் மன உழைச்சல் ஆண்களுக்கு மட்டுமே புரியக்கூடியது. இவ்வாறு இளம் வயதிலேயே வழுக்கை விழுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?இது தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

எந்த வயதாக இருந்தாலும் சரி, ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவது அவர்களது மன உளைச்சல், சுயமரியாதை, தன்னம்பிக்கை ஆகிய விஷயங்களை பெரிதும் பாதிக்கிறது.

முடி உதிர்வு பிரச்சனைக்கு மரபியல் முதல் ஊட்டச்சத்து குறைபாடுகள் வரை பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா எனப்படும் மரபணு பிரச்சனை பரம்பரை, பரம்பரையாக ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட காரணமாக அமைகிறது.

உடல் பருமன் பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கிறது. முக்கியமாக இது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் தலைமுடி அதிகமாக கொட்டும்.

உடல் பருமன் இதய நோய் முதல் நீரிழிவு வரை பல ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியது. உலகெங்கிலும் உள்ள பலர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த ஊட்டச்சத்து குறைபாடு ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.

இரும்புச்சத்து குறைவினால் வழுக்கையுடன் முடி உதிர்வு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இனிப்பு பொருட்கள் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.

இந்த இனிப்புகள் முடி உதிர்வதற்கும் வழிவகுக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ஆம், சர்க்கரை உணவுகள் உச்சந்தலையில் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

இதனால் உச்சந்தலையின் வெப்பநிலை குறையும். இது முடியை சேதப்படுத்தும். மேலும் முடி அதிகமாக உதிர்வதற்கும் வழுக்கை (அலோபீசியா) ஏற்படவும் காரணமாக அமைகின்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website