வாரிசு படத்தை பார்த்து கண்கலங்கிய பிரபலம்..உருக்கமான பதிவு..!

January 10, 2023 at 7:53 pm
pc

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் நாளை திரையில் வெளியாகவுள்ளது. வம்சியின் இயக்கத்தில் தமனின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு ,பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் குஷ்பு மற்றும் எஸ்.ஜெ சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்ற தகவலும் வந்துள்ளது. இந்நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ள அதே சமயத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகின்றது.

இதையடுத்து அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒன்பது வருடங்களுக்கு பிறகு வெளியாவதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். இதைத்தொடர்ந்து வாரிசு படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website