வாழைப்பூவில் மறைந்துள்ள மருத்துவ குணங்கள்

வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும். மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, ரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். குடல் புண் ஆறும். பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும்.