விஜய்க்கு ஓ.கே.ன்னா நாங்கள் கூட்டணி வைப்போம்? நாசுக்காக வலை விரித்த அமைச்சர்

June 29, 2023 at 3:51 pm
pc

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய் குறித்து பேசிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. 

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில், 10ம் மற்றும் 12ம் பொதுத்தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சுமார் 11 மணி நேரம் ஒரே மேடையில் நின்று கொண்டு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுத்தொகை கொடுத்தது அரசியலுக்கான அடிவாரமாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த செயலை குறிப்பிட்டு பலரும் பாராட்டி வரும் நிலையில், அரசியலுக்கான அடித்தளம் என விமர்சனங்கள் எழுகின்றன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

இந்நிலையில், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

விஜய் பிறந்த நாளில் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பதிலுக்கு அவர் எனக்கு நன்றி தெரிவித்தார். என் குடும்ப விழாவில் கூட அவர் கலந்து கொண்டு என்னிடம் 10 நிமிடம் தனியாக பேசினார். நாங்கள் இருவரும் அரசியல் பற்றி பேசவே இல்லை.

இரண்டு கொள்கைகளும் ஒத்துப் போகிற மாதிரி சூழ்நிலை அமைந்தால் கூட்டணியை பற்றி ஆலோசிப்போம் என்று உதயநிதி கூறினார். அவர் கொள்கையை முதலில் சொல்லட்டும், அதன் பிறகு பார்க்கலாம் என்றும் கூறினார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website