விஜய்சேதுபதி பட டீசரை வெளியிடும் தனுஷ்!


விஜய்சேதுபதி, சந்தீப் கிஷன், கவுதம் மேனன், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மைக்கேல்”.
இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை மாலை 05.31 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டீசரை தனுஷ், ஹிந்தி டீசரை ராஜ் & டிகே, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னட டீசரை ரக்சித் ஷெட்டி, தெலுங்கு டீசரை ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் வெளியிட உள்ளனர். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது