விஜய்யின் கடைசி பட இயக்குனர் இவர்தான்?

நடிகர் விஜய் தற்போது ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்து இருக்கிறார். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அது தான் அவரது கடைசி படமாக இருக்கப்போகிறது.
இந்நிலையில் தற்போது தெலுங்கு மீடியாக்களில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி தளபதி 69 படத்தை இயக்க வெற்றிமாறன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இது உறுதியானால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ட்ரீட் ஆக இருக்கும். அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இந்த கூட்டணி உறுதியாகும்.