விஜய்யுடன் மோதல்? மனம் திறந்த நெப்போலியன்

June 25, 2023 at 6:53 pm
pc

நடிகர் விஜய் குறித்து நடிகர் நெப்போலியன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

“போக்கிரி படத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு. நானும் விஜய்யும் பேசிக்கிறது இல்ல. அவர் படங்கள் எதையும் பார்க்கிறது இல்ல. விஜய் ரெடினா நானும் பேசுறதுக்கு ரெடி, இதை நீங்க விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். ” என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

லியோ படப்படிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்த நிலையில், விஜய் படித்த பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது என்று கூறலாம். 

நடிகர் நெப்போலியன்

1963-ம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர்பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகராக அறிமுகமானார். 

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த இவர், பல திருப்பங்களுடன் வில்லனாக களமிறங்கினார்.

ரஜினி நடித்த எஜமான் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனத்தில் நெப்போலியன் இடத்தை பிடித்தார்.

ஆனால் தற்போது சினிமாவில் ஈடுபடாமல் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் அங்கு அவர் சொந்தமாக விவசாயம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசிய வீடியோவானது தற்போது விஜயின் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

வீடியோவில் கூறியது என்ன? 

“விஜய் அவரோட அப்பா அம்மா கிட்டயே பேசமாட்றாரே. விஜய் தன்னோட அப்பா அம்மா கிட்டயே பேசிக்கிறது இல்லனு எல்லோரும் சொல்றாங்க. 

அமெரிக்கா வரை செய்தி வந்திருக்கு. அது உண்மையா? பொய்யா? என்று கூட எனக்கு தெரியாது.

முதல்ல அவரோட அப்பா அம்மா கூட சமரசம் ஆகட்டும். எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 வருஷங்களாச்சு. 

இவ்வளவு நாள் இடைவேளைக்கு பிறகு விஜய் என்னிடம் பேச தயாராக இருப்பாரா என்று எனக்கு தெரியவில்லை. நான் பேசுவதற்கு தயார் அவர் தயாரா என்று கேளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்ன தான் நடந்தது? 15 வருடங்களுக்கு மேல் கதைக்காமல் இருப்பதற்கு என்று ரசிகர்கள் குழம்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website