விஜய் என்னென்ன கார் வைத்திருக்கிறார் தெரியுமா?

September 14, 2023 at 8:55 pm
pc

உச்ச நடிகர்கள் என்றால் சொகுசுக்கு பஞ்சம் இருக்காது அப்படி சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் விஜய்யிடம் என்னென்ன கார்கள் இருக்கிறதென தெரியுமா? விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். அதனாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் அதிக வசூலைப் பெற்றிருந்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விஜய் பற்றிய பல விடயங்கள் இணையத்தில் வைரலாகி வந்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் தற்போது அவர் வைத்திருக்கும் கார்களின் விபரம் வெளியாகியுள்ளது.

அண்மையில், விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சய் நேர்காணல் ஒன்றில் விஜய் வாங்கிய கார்களைப் பற்றி கூறியிருக்கிறார்.

டாடா எஸ்டேட் 1992 – 2000 மாடல்

டொயோட்டா செரா 1990 – 1996 மாடல்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம்

BMW X6 – 2008–தற்போதைய மாடல்

நிசான் எக்ஸ்-டிரெயில் – 2000

ஆடி ஏ8 பிரீமியர் 118 NE

மினி கூப்பர் எஸ்

நடிகர் விஜய் இவ்வளவு விலை உயர்ந்த கார்களை வாங்கி வைத்திருப்பதாக அவரது நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website