விஜய் பட ட்ரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம்: ஆதரவாக இறங்கிய சீமான்

October 8, 2023 at 11:39 am
pc

நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ ட்ரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம் குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆபாச வசனம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

இந்த டிரைலரில் ஆபாச வசனங்களை விஜய் பேசுவது போன்று உள்ளது. இதற்கு,பல்வேறு தரப்பினர்களும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, லியோ படத்தை தடைசெய்ய வேண்டுமென இந்து மக்கள் முன்னணி இயக்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சீமான் பேசியது 

‘லியோ’ ட்ரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம் குறித்து நாம் தமிழர் கட்சி சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், லியோ படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம் ஒரு பெரிய விஷயமே இல்லை. இந்த மாதிரியான வசனங்களை வைப்பதற்கு சினிமாவின் நிலை மாறியுள்ளது.

இந்த டிரைலரில் வரும் ஆபாச வசனத்தை தணிக்கை குழு நீக்கியிருக்க வேண்டும். இல்லையென்றால், அப்போது வரும் ஒலியை அமைதிப்படுத்திருக்க வேண்டும்” என்று பதில் அளித்தார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website