விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குகள் உள்ள எண்ணெய் பாத்திரங்களை சுத்தம் செய்ய சூப்பரான டிப்ஸ் ….!!

July 18, 2022 at 3:41 pm
pc

பொதுவாக எவர்சில்வர் பாத்திரத்தில் அல்லது பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களில் எண்ணெய் ஊற்றி வைப்பது வழக்கம். இப்படி எண்ணெய் ஊற்றி வைப்பவர்கள் அதில் ஒரு முறை எண்ணெயை மாற்றியவுடன் சுத்தம் செய்து விட வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் எண்ணெய் பிசுக்குகள் ஒட்டிக் கொண்டு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும். இது அவ்வளவு ஈஸியான விஷயமும் அல்ல, ரொம்பவே கஷ்டப்பட்டு அதை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த ஒரு குறிப்பை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் இனி எண்ணெய் பாத்திரங்களை கொஞ்சம் கூட சிரமப்படாமல், கை வைக்காமல் எளிதாக சுத்தம் செய்து விடலாம். அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் இனி பார்ப்போம் வாருங்கள்.

பொதுவாக எண்ணெயை வைக்கும் பாத்திரங்கள் பாட்டில் அல்லது எவர்சில்வரில் இருப்பது ரொம்பவே நல்லது. அடுப்பங்கரைக்கு பக்கத்திலேயே நீங்கள் எண்ணெய் பாத்திரங்களை வைக்கக்கூடும், இதனால் அடுப்பிலிருந்து வரக்கூடிய அனல் பிளாஸ்டிக் பொருட்களை பாதிக்காமல் இருக்க பாட்டில் அல்லது எவர்சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது. அது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக்கில் படியும் அழுக்குகளை நீக்குவது ரொம்பவே கடினமாக இருக்கும். பாட்டில் அல்லது எவர்சில்வர் புட்டிகள் பயன்படுத்தினால் நீங்கள் ரொம்ப சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

வெள்ளை துணிமணிகளுக்கு போட பயன்படுத்தும் ஆலா லிக்விட் துணிமணிகளின் வெண்மை தன்மையை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இது துணிமணிகளை மட்டுமல்ல இந்த எண்ணெய் பிசுக்குகளையும் நீக்கும்அற்புதமான ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. பெரிய வாயை கண்ட பாத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீருக்குள் எண்ணெய் பாத்திரங்கள் மூழ்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.

இந்த கொதிக்கும் தண்ணீரில் ரெண்டு மூடி அளவிற்கு ஆலா சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் முழுவதுமாக டிடர்ஜென்ட் லிக்விட் அல்லது பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் எண்ணெய் பாத்திரங்களை முதலில் பைப் தண்ணீரில் நன்கு தண்ணீர் விட்டு ஒருமுறை கழுவி கொள்ளுங்கள். பின்னர் மூடி தனியாகவும், பாட்டில்களை தனித்தனியாகவும் தண்ணீருக்குள் முக்கி வைத்து விடுங்கள்.

குறைந்தது 15 நிமிடத்தில் இருந்து 20 நிமிடம் வரை அப்படியே நன்கு ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு எண்ணெய் பிசக்குகள் அனைத்தும் பாதி அளவிற்கு நன்கு அகன்று இருக்கும். அதன் பிறகு ஒரு இரும்பு ஸ்கிரப்பர் பயன்படுத்தி லேசாக தேய்த்தால் போதும், ரொம்பவும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிரமமும் இல்லாமல் எளிதாக எண்ணெய் பிசுப்புகள் அனைத்தும் தனியாக வந்துவிடும். பாத்திரத்திலும் கீறல்கள் எதுவும் இல்லாமல் இருக்கும்.

எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரங்களை தேய்க்கும் பொழுது ஆங்காங்கே கீறல்கள் விழுவது உண்டு. ஆனால் இந்த முறையில் நீங்கள் சுத்தம் செய்யும் பொழுது கீறல்கள் விழாமல் பாத்திரமும், பாதிப்பு  இல்லாமல் எண்ணெய் பிசுக்குகள் ரொம்பவே சுலபமாக வந்துவிடும். பாட்டிலுக்குள் இரும்பு நாரை விட்டுவிட்டு ஏதாவது ஒரு குச்சி அல்லது நீளமான ஸ்பூன் பயன்படுத்தி உள்ளேயும் நன்கு தேய்த்துக் கொடுங்கள், அவ்வளவுதான் அதன் பிறகு சாதாரண சோப்பு போட்டு ஒரு முறை தேய்த்து கழுவி விட்டால் பாத்திரங்கள் பளிச்பளிச்சென மின்னும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website