விடாமுயற்சி படத்தில் இணையும் மற்றொரு நடிகை .

October 17, 2023 at 7:28 pm
pc

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா மற்றும் ரெஜினா நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது மூன்றாவது ஆக பிரபல நடிகை ஒருவர் இந்த படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா, மற்றொரு முக்கிய கேரக்டரில் ரெஜினா ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளன .

விடாமுயற்சி’ படத்தில் ப்ரியா பவானி சங்கர் இணையும் அறிவிப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல் ஒவ்வொன்றாக வெளி கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு வேற லெவலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website