விண்ணைத்தாண்டி வருவாயா ……

February 21, 2024 at 7:41 pm
pc

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தனது கணவருடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது அவர் கணவரை தோளோடு தோள் சாய்ந்து கொண்டு லிப்கிஸ் கொடுத்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அமலா பால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது யோகா செய்யும் புகைப்படங்கள், கணவருடன் ரொமான்ஸில் இருக்கும் புகைப்படங்கள்,நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அமலாபால் பதிவு செய்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் ஆக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார்.

வெள்ளை நிற காஸ்டியூமில் இருக்கும் அமலாபால் அவருடைய கணவர் தோளோடு தோள் சாய்ந்து ரொமான்ஸ் செய்வது, கணவருக்கு அமலாபால் கொடுக்கும் லிப் கிஸ் முத்தம் ஆகிய காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது. இந்த க்யூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் லைக் குவிந்து உள்ளது என்பதும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website