வித்தியாசமான வெற்றிலைச்சாதம் நீங்களும் சமைத்து பாருங்கள்:.
தேவையான பொருட்கள்…
வெற்றிலை – 3
கடுகு-அரை டீஸ்பூன்
மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
பூண்டு – 2 பல்,
சின்ன வெங்காயம் – 4,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
எலுமிச்சம்பழம் – பாதி மூடி
சாதம் – ஒரு கப்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
செய்முறை…
வெற்றிலை, மிளகு, சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து…
பூண்டு, வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்த வெற்றிலைக் கலவையை சேர்த்து, சாதம், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறவும்.இது, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.