விந்தணு தரத்தை குறைக்கும் லேப்டாப்…காரணம் இதுதானா …?

January 31, 2023 at 7:40 am
pc

தற்போதைய கால கட்டத்தில் லேப்டாப், கணினி உள்ளிட்டவற்றின் பயன்பாடு மிக அதிகமாகவே உள்ளது. நாள்தோறும் செல்போன், லேப்டாப் போன்ற கதிர்வீச்சுகளைத் தரும் கருவிகளையே பயன்படுத்தி வருகிறோம். இவற்றினைப் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், பயன்படுத்துவதற்கென விதிமுறை உள்ளது. நம் உடல் என்ன ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலும், நம் அன்றாட செயல்முறையின் காரணமாக, எதாவதொரு விளைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையிலேயே, லேப்டாப் பயன்படுத்துவதும் அமையும். மடியில் வைத்து லேப்டாப்பை பயன்படுத்துவதால், ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்

விந்தணுக்களின் பாதிப்பு

லேப்டாப் பயன்படுத்துவதால், ஆண்களுக்கு ஸ்க்ரோடல் ஹைபர்தெர்மியா உருவாகிறது. அதிகமாக AC-ல் இருப்பவர்கள், மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். நாம் அன்றாட வாழ்வில் கேள்விப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இதற்கான முக்கிய காரணம் என்னவென்று நமக்குத் தெரியாது. இதன் விளைவாக, கருவுறுதலில் பாதிப்பு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது என்னென்ன காரணங்களால் ஏற்படுகிறது? இதனை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்துத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

காரணங்கள்

லேப்டாப் மூலம் கருவுறுவுக்குக் காரணமாக இருக்கும் ஆண்களின் விந்தணுக்களைப் பாதிப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. லேப்டாப்பை மடியில் அல்லது தொடையில் வைக்கப்படும் போது உருவாகும் வெப்பம் மற்றும் மடிக்கணினியின் மின்காந்த புலம் போன்றவை விந்தணுக்களின் தரத்தைப் பாதிப்பதுடன், அதனை உற்பத்தி செய்யும் திறனையும் குறைக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களைப் பற்றி இதில் காணலாம்.

உடல் சூடு அதிகரித்தல்

லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளியிடப்படும் வெப்பமானது, விதைப்பையைப் பாதுகாக்கக் கூடிய தோலின் பையான ஸ்க்ரோட்டத்தின் வெப்பநிலையை உயர்த்தும்.

குறிப்பாக, விதைப்பையின் முக்கிய பங்கு உடலின் வெப்பநிலையை விட விதைகளின் வெப்பநிலையை குறைவாக வைத்திருப்பதாகும். இது விந்தணுக்கள் உற்பத்தி செய்வதற்கான திறனை அதிகரிக்கச் செய்யக் கூடிய உறுப்பாகவும் அமைகிறது. ஆனால், லேப்டாப்பில் இருந்து வரும் வெப்பம், இந்த விதைப்பையினை சூடாக்குவது அதில் உள்ள விந்தணுக்களைப் பாதிப்பதாக உள்ளது. இதன் காரணமாக, விந்தணுக்கள் உற்பத்தியும் குறையக் கூடும். இதனால், விந்தணுவின் தரம் குறைவாக இருக்கும்.

கதிர்வீச்சு

மின்சாரம் மற்றும் காந்த சக்திகளின் கலவையால் உருவாக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத ஆற்றலின் ஒரு பகுதியாக விளங்குவதே மின் காந்தப் புலம் ஆகும். எடுத்துக்காட்டாக, செல்போன், மைக்ரோவேவ் ஓவன்கள் போன்றவற்றைக் கூறலாம்.

உயர் அதிர்வெண்களைக் கொண்ட இந்த எக்ஸ்-கதிர்கள், புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுவும் விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் வகையில் அமையும் காரணிகளில் ஒன்று. அதன் படி, லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்வீச்சானது விந்தணுவின் டிஎன்ஏ-வை சேதப்படுத்தி அதன் தரத்தைக் குறைப்பதாக அமைகிறது.

Wi-Fi ஏற்படுத்தும் தீமைகள்

இன்டர்நெட் சேவைக்காக உபயோகப்படுத்தும் Wi-Fi மூலம் ஏற்படும் கதிர்வீச்சினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல்

விந்தணுவின் டிஎன்ஏவை சேதப்படுத்துதல்

மாற்று விந்தணு இயக்கம்

விந்தணு அளவு மற்றும் வடிவத்தை மாறுதல்

உயிரணுப் பிரிவின் போது மரபணு மாற்றங்கள் ஏற்படுதல்

முக்கிய ஹார்மோன்கள் என்சைம்களை சீர்குலைத்தல்

விந்தணு பாதிப்பைத் தவிர்க்கும் முறைகள்

இதனை பின்வரும் வழிமுறைகளின் மூலம் தவிர்க்க முடியும்.

 நிமிர்ந்து உட்கார்ந்திருந்தல், இரண்டு கால்களையும் பிணைத்தவாறு உட்கார கூடாது. இரு கால்களுக்கு இடையே சற்று இடைவெளி இருத்தல் வேண்டும்.

லேப்டாப்பை (மடிக்கணினியை) மடியில் வைத்து பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

 முடிந்த வரை, மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தாமல், மேசையின் மீது வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

 இவற்றை தவிர, சூடான நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது, தளர்வான உள்ளாடை மற்றும் பேன்ட் அணிவது, ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டிருப்பது உள்ளிட்டவற்றின் மூலம் விந்தணு பாதிப்பைத் தடுக்க முடியும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website