விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் முன்னணி ஹாலிவுட் நடிகர்!

ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் பனிப்புயலின் போது விபத்தில் சிக்கியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் படவரிசையில் Hawkeye எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஜெர்மி ரென்னர்.
51 வயதாகும் ஜெர்மி, தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். பனிப்புயல் காரணமாக அப்பகுதியில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் கடுமையான புயல் காற்று தாக்கியதில் ஜெர்மி சென்ற விபத்திற்குள்ளானது. அவர் உடனடியாக மீட்புப்படையினரின் உதவியுடன் விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், படுகாயமடைந்ததால் ஜெர்மி ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்றும், அவரது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மி ரென்னர் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். மேலும், அவர் விரைவில் உடல்நலம் பெற்று வர வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவில் பேரழிவுப் பனிப்புயல் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.