விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நடிகர் விஷால்…

August 12, 2022 at 11:47 am
pc

நடிகர் விஷால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. நடிகர் விஷால், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இத்திரைப்படம் 5 மொழிகளில் உருவாகி நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து வருகிறார்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக சென்னையில் செட் அமைத்து நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு வாரமாக ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

ஆக்ஷன் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் விஷால் திடீரென விபத்தில் சிக்கியுள்ளார். குறித்த விபத்து காரணமாக நடிகர் விஷாலுக்கு கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் அறிவுரை படி ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஷாலுக்கு ‘லத்தி’ படத்தின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் அடிக்கடி காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website