விருந்தில் இனிப்பு வைக்க இது தான் காரணமா…? படிச்சா உங்களுக்கே புரியும் …!!

June 12, 2022 at 7:50 am
pc

இந்திய பாரம்பரியத்தின் படி எல்லா விஷேசங்களிலும் சிறப்பு விருந்து கட்டாயம் இடம்பெறும். அப்படி விருந்து வைக்கும்போது இனிப்புகள் இல்லாமல் இருக்காது. பாரம்பரிய இனிப்புகள் முதல் நவீன டெசர்ட்கள் வரை அந்ததந்த விஷேசங்களுக்கு ஏற்றவாறு இனிப்புகள் பரிமாறுவார்கள். பொதுவாக பாரம்பரிய முறைப்படி வாழையிலையில் தான் விருந்து வைப்பார். அப்போது முதலில் இலையில் வைக்கப்படுவது இனிப்பு தான்.

பலகாரங்கள் இல்லை என்றால் கொஞ்சம் சர்க்கரை அல்லது வெல்லத்தை வைப்பார்கள். எந்த நல்ல காரியத்தையும் இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோல் தற்போது உணவு சாப்பிட்டு முடித்த பின்பு இனிப்புகளை சாப்பிடும் பழக்கமும் வந்துவிட்டது. ஆனால், உணவு சாப்பிடுவதற்கு முன்பு இனிப்பு சாப்பிடலாமா அல்லது உணவு சாப்பிட்ட பின்பு இனிப்பு சாப்பிடலாமா? எது நல்லது? இதைப் பற்றி ஆயுர்வேதம் சொல்லும் கருத்தை பார்க்கலாம்.

ஆயுவேதத்தின் படி, இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் துவர்ப்பு என்ற வரிசையில் ஆறு சுவையுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அதாவது ஒரு நபர் முதலில் இனிப்புடன் தொடங்கி கடைசியாக துவர்ப்புடன் முடிக்க வேண்டும். ஒரு மனிதனின் நல்வாழ்வுக்கு ஆறு சுவையுள்ள உணவுகளும் முக்கியம். அறுசுவை என்பது ஆறு சுவைக் கொண்ட உணவு வகைகள். ஆனால், ஒரே சுவையுள்ள உணவை அதிகமாக சாப்பிடுவது அல்லது ஒரு சில சுவைகளை சாப்பிடாமலேயே இருப்பது உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எந்த விஷேசங்களிலும் விருந்துகளிலும் எப்போதும் இனிப்புகளை தான் முதலில் சாப்பிட வேண்டும். ஏனென்றால் மற்ற சுவைகளை விட இனிப்பு சுவை தான் நாக்கில் உள்ள சுவை அரும்புகளை தூண்டி விடுமாம். இதனால், உமிழ்நீர் அதிகமாக சுரந்து செரிமானத்துக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தியாகும். ஆனால், உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு பலங்காரங்களை சாப்பிட்டால் வயிற்றில் ஆசிட் உடன் ரியாக்ட் ஆகி அசிடிட்டி, வாயு பிரச்சனை, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு சாப்பிட்ட பின்பு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும், அப்போது மோர் அல்லது சோம்பு ஆகியவற்றை சாப்பிடலாம். அல்லது வெற்றிலை பாக்கு கூட பயன்படுத்தலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website