விவாகரத்து உறுதியாகிவிட்டதா? பிக்பாஸ் பிரபலத்தின் பதிவால் பரபரப்பு..!

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரக்சிதா என்பதும் இவர் மிகவும் சிறப்பாக விளையாடி இறுதி கட்டத்தை நோக்கி சென்றார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய கணவர் தினேஷ் இந்த சீசனில் போட்டியாளராக விளையாடி வருகிறார்.
தினேஷ் மற்றும் ரக்சிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும் தனது மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தினேஷ் பிக்பாஸ் வீட்டில் பலமுறை அவர் கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் ரக்சிதா பிடிவாதமாக தினேஷை வீட்டு பிரிய வேண்டும் என்று இருப்பதாகவும் தினேஷ் மீது அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் கூட செய்திகள் வெளியானது.