வீட்டில் உள்ள ஈக்களின் தொல்லையிலிருந்து விடுபட அட்டகாசமான இந்த டிப்ஸா பாலோவ் பண்ணுங்க ..!!

December 23, 2022 at 7:53 am
pc

பெருப்பாலான வீடுகளில் ஈக்களின் தொந்தரவு அதிகமாகக் காணப்படுகிறது. அதிலும் பழங்களினால்  வரக்கூடிய ஈக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிறது. சமையலறையிலும் மற்றும் சாப்பிடும் இடங்களிலும் கூட ஈக்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனை எப்படி சரிச் செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.   

ஈக்கள் முதலில் கடைகளிலிருந்து வாங்கி வரும் பழங்களிருந்து துடங்கி, சமையலறையில் உள்ள பாத்திரங்கள் கழுவும் இடங்கள் மற்றும் ஈரபதமிக்க இடங்களும் அதிக அளவில் உள்ளது.

ஈக்கள் ஈரப்பதமிக்க இடங்களிலேயே அதிக அளவில் பெருக்கமடைகிறது. காம்பு அகற்றப்பட்ட பழங்கள் மற்றும் சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் இடங்களும் பரவுகிறது. அதனால் இடங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதன் மூலமாக ஈக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம். சில கிருமி நாசினிகளைப் பயன்படுத்தியும் ஈக்களை விரட்டலாம்.

ஆப்பிள் சிடார் வினிகர் மூலம் ஈக்களை விரட்டுதல்

ஒரு கப்பில் சிறிதளவு ஆப்பிள் வினிகர் ஊற்றிக் கொள்ளவும். அதன் பின் ஒரு பிளாஸ்டிக் கவரில் சிறுசிறு துளைகளிட்டு அதனைக் கப்பின் மேல் மூடவும். வினிகரின் வாசனையால் ஈக்கள் எளிதில் ஈர்க்கப்படும். இதனால் ஈக்கள் பெரும் அளவில் குறையைக் கூடும்.

சோப் மற்றும் வினிகர் மூலம் ஈக்களை விரட்டுதல்:

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் வினிகர் சேர்த்து, அதனுடன் 2 சொட்டு சோப்பு நீரைச் சேர்த்து ஈக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வைத்தால் போதும் ஈக்கள் ஈர்க்கப்பட்டு பாத்திரத்தில் வந்து விழுந்துவிடும். இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் ஈக்களை விரட்டலாம்.

ஒயின் மற்றும் பீர் பாட்டிலின் மூலம் ஈக்களை விரட்டுதல்:

ஒயின் மற்றும் பீர் பாட்டிலின் வாய்ப்பகுதி சிறியதாக இருக்குமாறு எடுத்து அதில் சிறிதளவு ஒயின் மற்றும் பீர் ஊற்றி அதனை ஈக்கள் பரவுமிடங்கள் வைத்து விட்டால் போதும். வினிகர் வாசம் போல் ஒயின் மற்றும் பீர் வாசத்தினால் ஈக்கள் எளிதில் ஈர்க்கப்படும்.

மேலே கூறப்பட்ட வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஈக்களை வரமால் தடுக்க முடியும். ஆனால் முழுமையாக ஒழிக்க கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

காய்கறிகளையும் மற்றும் பழுத்த பழங்களையும் மூடிவைக்கவும்.

அழுகிய நிலையில் உள்ள பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை அதைகைய பொருட்களை அகற்றவும். பாத்திரங்கள் கழுவும் இடம் மற்றும் சாப்பிடும் இடங்கள் ஆகியவற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும்.

அன்றாட சேரும் குப்பைகளை அன்றைக்குச் சுத்தப்படுத்தவும் மற்றும் குப்பைத் தொட்டியைக் கழுவிப் பயன்படுத்தவும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தவும்.

கடைகளிருந்து வாங்கி வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவிப் பயன்படுத்துவதன் மூலம் ஈக்கள் முற்றிலும் தவிர்க்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website