வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தப்படுத்துவது எப்படி…?

January 2, 2023 at 7:53 am
pc

வீட்டிற்கு மிகவும் அவசியமானவையில் தண்ணீர் தொட்டியும் ஒன்று. ஏனென்றால் தினசரி வாழ்க்கையில் தண்ணீர் பயன்பாடு அதிக பங்கு வகிக்கிறது. அதனால், தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்வதால் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதுடன் நோய் இல்லமால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

வீட்டில் உள்ள எல்லா தண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதால், அதை சுத்தமாக வைத்துக் கொள்வது முக்கிய ஒன்றாக உள்ளது. அதனால் இந்த பதிவில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு முன், ஒரு பெரிய வாளி மற்றும் பேரலில் முழுவதுமாக தண்ணீரை நிரப்பவும். அது தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்யப் பயன்படும்.

தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் நாளில், தண்ணீரைத் தொட்டியில் முழுவதுமாக நிரப்புவதைத் தவிர்க்கவும்.

தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு முன், தொட்டியில் உள்ள முழுவதுமாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். வெளியேற்றும் தண்ணீரை, வாளி அல்லது டிரமில் சேமித்துப் பின் வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
முதலில் தொட்டியின் உள்ளே இறங்குவதற்கு முன் கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ் அணிந்து கொண்டு இறங்கவும்.

பிறகு, தொட்டியில் தண்ணீர் முழுவதுமாக வடிந்த பின் சுவரையும் மற்றும் தரையையும் நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பாசிகள், பூஞ்சைகள் மற்றும் கறைகள் போகும் வரை நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். அதன் பின் மிக வேகமாகத் தண்ணீரை நன்றாக அடித்து ஊற்றி தொட்டியைக் கழுவ வேண்டும்.

நன்கு தேய்த்த பிறகும், தொட்டியில் அழுக்குகள் இருந்தால் அதனை ஏதாவது க்ளீனிங் பவுடர் பயன்படுத்தி ஸ்கிரப் செய்யலாம்.

தொட்டியைச் சுத்தம் செய்வதற்குக் கிருமிநாசினிகள், சோப்புகள் மற்றும் பவுடர்கள் பயன்படுத்தலாம். இவை அனைத்துக் கிருமிகளையும், பூஞ்சைகளையும் மற்றும் பாக்டீரியாவையும் விரட்டி அடித்து தொட்டியைச் சுத்தம் செய்ய உதவும்.

தண்ணீர் தொட்டியில் கிருமிநாசினிகள் பயன்படுத்திய பின், சிறிதளவு தண்ணீரைத் தொட்டியில் நீர் நிரப்பி, வீட்டின் தேவைக்குச் செல்லும் குழாய்களாய் திறந்து வெளியேற்ற வேண்டும். இதனால், குழாய்களில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் வெளியேறும்.

தொட்டியாய் சுத்தம் செய்த பிறகு, சில மணி நேரம் தொட்டியை உலர விடவும். அதன் பின் தொட்டியில் தண்ணீர் நிரப்பிப் பயன்படுத்தலாம்.

சுத்தம் செய்யும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்


1.தொட்டியைச் சுத்த செய்யும் முன்னால் தண்ணீரை வெளியேற்றுவது அவசியம் மற்றும் கையுறைகள், மாஸ்க் அணிவது முக்கியம்.

2.தொட்டியைக் கழுவிய தண்ணீரை செடிகளும் மற்றும் வீட்டின் தேவைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது.

3.மிகவும் அவசியம் தொட்டியைச் சுத்தம் செய்யச் செல்லும் போது உதவி மற்றும் அவசரத்திற்கு அருகில் ஒரு நபரை வைத்துக் கொள்ளவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website