வீட்டில் வேர்க்கடலை இருக்கா..? அப்போ உடலுக்கு ஆரோக்கியமான பீனட் மில்க் ஷேக் செய்து குடியுங்கள்..!!

July 5, 2022 at 12:03 pm
pc

வேர்க்கடலை உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது. அதை இப்படி ஜூஸ் போல் அரைத்துக் குடிப்பதிலும் தனி சுவை உண்டு. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான_பொருட்கள்:

வேர்க்கடலை – 1/2 கப்
பால் – 1 கிளாஸ்
வெண்ணிலா ஐஸ் கிரீம் – 1 ஸ்கூப்
சர்க்கரை – தே . அளவு
கண்டன்ஸ் மில்க் – 2 ஸ்பூன் ( தேவைப்பட்டால்)

செய்முறை :

இரவு தூங்கும் முன் வேர்க்கடலையை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பாலை காய்ச்சி சூடு ஆறியதும் ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
மறுநாள் காலை வேர்கடலையை வடித்து அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக பால் மற்றும் ஐஸ் கிரீம், சர்க்கரை மற்றும் கண்டன்ஸ் மில்க் சேர்த்து மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டுங்கள்.
அவ்வளவுதான் அதை அப்படியே கிளாஸில் ஊற்றி மேலே பாதாம் மற்றும் காய்ந்த திராட்சை தூவி குடிக்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website