வெண்டைக்காயை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்…தெரிஞ்சிக்கோங்க!!

February 9, 2023 at 12:53 pm
pc

பொதுவாக சமையலில் வெண்டைக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு.

ஆனால் இதனை பலரும் உணவுகளில் சேர்ப்பதே குறைவு தான். இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.  

குறிப்பாக அதிகப்படியான ஊட்டச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட் சத்து ,விட்டமின் ஏ, சி, இ மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன.  

 மேலும் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஃபேட்டி ஆசிட், தயமின், ஃபோலேட், அமினோ அமிலங்கள் போன்றவை வெண்டைக்காயில் உள்ளன. 

இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது சில உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். தற்போது அது என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

  • வெண்டைக்காயை கட்டுப்பாடு இன்றி சாப்பிடும் பட்சத்தில் உங்களுக்கு வயிறு உப்புசம், வயிற்றுப் பிடிப்பு, வாயுத்தொல்லை அல்லது வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.  

  • உங்களுக்கு சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருக்கிறது என்றால் வெண்டைக்காயை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதேபோல பித்தப்பை கல் உருவாகவும் வெண்டைக்காய் காரணமாக அமையும்.

  • வெண்டைக்காயில் அதிகம் எண்ணெய் ஊற்றி வறுவல் செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்குமாம்.  

  • சைனஸ் பிரச்சினை இருந்தால் உங்களுக்கு இருமல் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பின் வெண்டைக்காய் சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். 

  • செரிமானக் கட்டமைப்பு பலவீனமாக இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படக் கூடும்.   

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website