வெறும் காய்ச்சல் அறிகுறி தான்… மூளையை உண்ணும் கிருமியால் மரணமடைந்த சிறுவன்

July 21, 2023 at 3:37 pm
pc

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் மூளையை உண்ணும் கிருமியால் தாக்கப்பட்டு 2 வயதேயான சிறுவன் மரணமடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

மூளையை உண்ணும் கிருமி

குறித்த சிறுவனின் தாயார் ப்ரியானா பண்டி தமது பேஸ்புக் பக்கத்தில் மகனின் இறப்பு தொடர்பில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்துள்ளார். சிறுவனை தமது ஹீரோ என குறிப்பிட்டுள்ள அவர், நாளை ஒருநாள் வானுலகில் வந்து சந்திப்பேன் எனவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சிறுவன் உட்ரோ மூளையை உண்ணும் கிருமியால் பாதிக்கப்பட்டு ஜூலை 19ம் திகதி மரணமடைந்துள்ளான். Naegleria fowleri என குறிப்பிடப்படும் அந்த கிருமியால் தாக்கப்பட்டவர்கள், பெரும்பாலானவர்களுக்கு மரணம் உறுதி என்றே கூறுகின்றனர்.

அரிதாக ஒருசில அமெரிக்க மக்களே, மீண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெந்நீரில் காணப்படும் இந்த கிருமியானது, Ash Springs பகுதியில் நீச்சலடித்து விளையாடிய சிறுவனின் உடம்பில் நுழைந்திருக்கலாம் என்றே கூறுகின்றனர்.

கடந்த வாரம் காய்ச்சலின் அறிகுறிகளுடன் காணப்பட்ட சிறுவன் மிகவும் சோர்ந்து காணப்பட்டுள்ளான். இதனையடுத்து சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

97 சதவீத பேர்களும் மரணம்

பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு மூளைக்காய்ச்சல் இருப்பதாக முதலில் நினைத்தனர். ஆனால் மிக தாமதமாக, சிறுவனுக்கு Naegleria fowleri பாதிப்பு என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்த கிருமியால் பாதிக்கப்பட்ட 97 சதவீத பேர்களும் மரணமடைந்துள்ளதாகவே கூறுகின்றனர். பொதுவாக இந்த கிருமியானது மூக்கு வழியாக நுழைந்து மூளையை எட்டுகிறது. தொடர்ந்து மரணத்தை ஏற்படுத்தும் வகையில் மூளையை பாதிக்கிறது. 

தொடக்க அறிகுறிகள் என்பது, தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி என காணப்படுவதாக கூறுகின்றனர். அமெரிக்காவில் 1962 முதல் 2023 வரையில், பாதிக்கப்பட்ட 150 பேர்களில் வெறும் ஐவர் மட்டுமே மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக Naegleria fowleri பாதிப்பு ஏற்பட்ட 3 நாட்களில் மரணம் உறுதி என்றே இதுவரையான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website