வெளிச்சத்துக்கு வந்த சிம்புவின் ரகசிய உறவு!

June 14, 2023 at 7:27 pm
pc

சிம்பு இப்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தற்போது தன்னுடைய லுக்கையே வேற லெவலில் மாற்றி வருகிறார். ஏற்கனவே இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்த நிலையில் தற்போது படத்திற்கான ஹீரோயின் வேட்டை நடைபெற்று வருகிறது.

அதற்காக பாலிவுட் ஹீரோயின்கள் முதல் டாப் நடிகைகள் வரை பலரின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால் எதுவும் முடிவாகாத நிலையில் சிம்பு தற்போது தனக்கு வேண்டப்பட்ட நடிகை ஒருவரை சிபாரிசு செய்து வருகிறாராம். ஏற்கனவே கொரோனா குமார் படத்தில் நடிக்க இருந்த போதும் இந்த நடிகையை தான் அவர் சிபாரிசு செய்தாராம்.

அந்த அளவுக்கு அவர் சிம்புவுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒருவராக இருக்கிறாராம். இது குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தாலும் தற்போது பல விஷயங்கள் இவர்களின் உறவை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் சிம்புவின் மனதை இந்த அளவுக்கு ஆட்டி படைக்கும் நடிகை வேறு யாரும் கிடையாது ஈஸ்வரன் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நிதி அகர்வால் தான்.

அந்த படம் வெளிவந்த சமயத்திலேயே இவர்கள் இருவரும் காதலிப்பாகவும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. அது மட்டுமல்லாமல் விரைவில் இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக கூட கூறப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் அது குறித்து வாய் திறக்காமல் இருந்தனர்.

அதன் பிறகு சிம்புவும் நடிப்பில் கவனம் செலுத்தியதால் இந்த விஷயம் அப்படியே அடங்கிப் போனது. ஆனாலும் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து தங்கள் காதலை வளர்த்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது சிம்பு நடிக்க இருக்கும் படத்திலும் நிதி அகர்வாலை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று கூறுகிறாராம்.

ஆனால் தயாரிப்பு தரப்பு இது குறித்து இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை. ஆனாலும் நிதி அகர்வால் சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதாம். அந்த வகையில் படு சீக்ரெட்டாக இருந்த இந்த உறவு தற்போது அம்பலம் ஆகி இருக்கிறது. இதை கேள்விப்பட்ட பலரும் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என கடந்து செல்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website