வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

June 26, 2023 at 5:55 pm
pc

பல இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்து வருகின்றனர். இன்னும் ஏராளமானோர் அடுத்து வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் திங்களுடன் இருக்கின்றனர்.சிலர் படித்து விட்டு அந்த நாட்டிலேயே வேலை செய்ய வேண்டும் என்ற கனவுகளுடன் செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா, கனடா, அமேரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவை நாடுகளுக்கு செல்லவே தேர்ந்தெடுக்கின்றனர். இதனால், மாணவர் விசாக்களின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதுபோன்ற சூழலில்தான், சில மாணவர்கள் போலி விசா வழங்கும் நேர்மையற்ற முகவர்களிடம் தெரியாமல் சிக்கிக்கொண்டு, தங்கள் பணத்தையும் இழந்து, வெளிநாட்டு படிப்பு, வெளிநாட்டு வாழ்க்கை போன்ற கனவுகளையும் இழந்துவிடுகிறார்கள்.

இதுபோல் ஏமாறாமல் இருக்க, மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது இவற்றையெல்லாம் கவனத்தில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றில் படிக்கவே ஆசைப்படுகினற்னர். விசா விண்ணப்பம், தங்குமிடம், கல்விக் கட்டணம் மற்றும் பிற தேவைகளுக்கு அவர்கள் பெரும் தொகையை செலுத்துகிறார்கள்.

மாணவர்கள் அதிகமாக பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வதால் மாணவர் விசாக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், மாணவர்களை ஏமாற்றும் மோசடி முகவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பல மாணவர்கள் இப்படிப்பட்ட மோசடி முகவர்களுக்கு இரையாகி உள்ளனர். பெரும் தொகையை வாங்கிக்கொண்டு போலி விசா தாள்களை வழங்கியுள்ளனர். சமீபத்தில், கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் மீது போலி விசா மோசடி குற்றசாட்டுளால், நாடு கடத்த உத்தரவிடப்பட்ட சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விசா அவுட்சோர்சிங் மற்றும் தொழில்நுட்ப சேவையான VFS குளோபல், வெளிநாட்டுக் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது மாணவர்கள் எவ்வாறு இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்குவதைத் தவிர்க்கலாம் என்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மாணவர் விசா சீசன் மாணவர் விசா சீசன் மே நடுப்பகுதியில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிகிறது. விசாக்களுக்கு அதிக அவசரம் உள்ளது மற்றும் மாணவர்கள் மோசடி முகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது போன்ற மொசுடடி சம்பவங்கள் மாணவர்களின் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பை பாதிக்கிறது. அதுமட்டுமின்றி உண்மையான மாணவர்கள் மற்றும் நிறுவனங்களின் நற்பெயரையும் கெடுக்கும்.

மாணவர் விசா விண்ணப்பிக்கும் போது கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியவை

1. பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை படிப்புகளுக்கு மிகவும் விருப்பமான இடங்களாகும். ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் விருப்பமான இடங்களாக மாறிவிட்டன. நாம் பார்க்கும் விசா விண்ணப்பத் தொகுதிகள் இந்தப் போக்கைப் பிரதிபலிக்கின்றன.

2. விசா சேவை வழங்குநர்களாகக் காட்டிக்கொண்டு அணுகும் மூன்றாம் தரப்பினர்களிடம் விசா விண்ணப்பதாரர்கள் கவனமாகத் தொடர பரிந்துரைக்கப்படுகிறது.

3. மாணவர்கள் சுயமாக ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் சேர திட்டமிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தகவல்களை முழுமையாக ஆராய வேண்டும்.

4. மோசடி செய்யும் இத்தகைய “சாம்பல் ஆபரேட்டர்களுக்கு” (grey operators) பலியாவதைத் தடுக்க, இந்தியாவில் இருந்து சர்வதேச பயணத்திற்கான மிகப்பெரிய தேவையைக் கருத்தில் கொண்டு, கூடிய விரைவில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website