வெளியே போகும் முன் இதால முகத்தை துடைச்சா, பளிச்சுன்னு வெள்ளையா தெரிவீங்க தெரியுமா…?

August 15, 2022 at 6:05 am
pc

நாம் அன்றாடம் சருமத்திற்கு கொடுக்கும் ஒரு பொதுவான செயலாக முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவுவோம். பின் துணியால் முகத்தைத் துடைத்த பின், வறட்சியான சருமத்தினராக இருந்தால் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவோம். இச்செயலால் அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று காணப்படும். ஆனால் இதற்கு பதிலாக நாம் டோனரைப் பயன்படுத்தினால், சருமம் இன்னும் பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும் என்பது தெரியுமா?

வறட்சி, எண்ணெய் பசை மற்றும் சென்சிடிவ் என்று சரும வகைகளில் பல உள்ள. ஒவ்வொரு சருமத்தினரும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் சருமத்தில் அதிக பருக்களால் பாதிக்கப்படலாம், சருமத்துளைகள் திறந்து அசிங்கமாக மேடு பள்ளமான அசிங்கமான சருமத்தால் அவஸ்தைப்படலாம், சருமத்தோல் உரிந்து அசிங்கமாக காட்சியளிக்கலாம், இன்னும் சிலர் சருமத்தில் அரிப்புக்களை சந்திக்கலாம்.

சரும வகைக்கு ஏற்பட டோனர்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அவசியம். டோனர்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதன் மூலம், சரும ஆரோக்கியம், பொலிவு, இளமைத்தன்மை போன்றவற்றைப் பெறலாம். ஆனால் அனைத்து வகையான டோனர்களும் அனைவருக்குமே பொருந்தாது. இக்கட்டுரையில் சரும வகைக்கு ஏற்றவாறான சில நேச்சுரல் டோனர்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் பசை சருமத்தினருக்கான நேச்சுரல் டோனர்:எண்ணெய் பசை அல்லது பருக்களை அதிகம் கொண்டவர்கள், இந்த வகை டோனரைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசைக் குறையும். இந்த டோனர் எண்ணெய் பசை சருமத்தினர் பொதுவாக சந்திக்கும் முகப்பரு பிரச்சனையைக் குறைக்க உதவும்.

தேவையான பொருட்கள்:


க்ரீன் டீ – 3/4 கப்
ஆப்பிள் சீடர் வினிகர் – 1/4 கப்
டீ-ட்ரீ ஆயில் – சில துளிகள் (விருப்பமிருந்தால்)
லாவெண்டர் ஆயில் – சில துளிகள் (விருப்பமிருந்தால்)

தயாரிக்கும் முறை:

3/4 கப் கொதிக்கும் நீரில் க்ரீன் டீ பேக்கைப் போட்டு ஊற வைத்து, பின் அந்த நீரை ஒரு ஜாரில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது டோனர் தயார்.


பயன்படுத்தும் முறை:
  • ஒரு பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி தயாரித்து வைத்துள்ள டோனரில் நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்ப்ரே பாட்டிலில் கலவையை ஊற்றி, முகத்தில் தெளித்துக் கொள்ளலாம்.
  • பின் முகத்தை நீரால் கழுவாமல், உலர்த்த வேண்டும்.
  • இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • தயாரித்து வைத்துள்ள இந்த டோனரை ஃப்ரிட்ஜில் வைத்து வந்தால், 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
  • வறட்சியான சருமத்தினருக்கான நேச்சுரல் டோனர்:
  • வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் சருமத்தில் தோல் உரிந்து, சருமம் சுருக்கத்துடன் அசிங்கமாக காட்சியளிக்கும். மேலும் இந்த வகை சருமத்தினர் சரும அரிப்பு, சருமத்தில் வெடிப்புக்கள் போன்ற பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள டோனர் விடுதலை அளிக்கும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website