வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணம்.., ரேஷன் கடைகளில் கிடைக்கும்

December 9, 2023 at 9:51 pm
pc

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

நிவாரண உதவியாக ரூ.6,000

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனடிப்படையில், மிக்ஜம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். 

  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தபட்டுள்ளது. 
  • சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 -லிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410 லிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
    வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 என்றிருந்ததை ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
    சேதமடைந்த படகுகளுக்கான அதிகபட்ச மானியத் தொகை ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும்.
    அதிகபட்ச மானியத் தொகை ரூ,5 லட்சத்திலிருந்து ரூ.7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website