வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கிவிட்டதா? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

December 6, 2023 at 2:18 pm
pc

வெள்ளத்தில் மூழ்கிய கார்களை உடனே Start செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிவுரை

கடந்த நாட்களில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் முழு சென்னையும் வெள்ளத்தில் மூழ்கியது. 

இதில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் நீரினால் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆகவே இதை எப்படி Start செய்து பயன்படுத்தலாம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அது பற்றி பார்க்கலாம்.

  • கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாகனங்களை பழுது பார்க்கும் இடத்திற்கு எடுத்துச்சென்று உட்புகுந்துள்ள நீரை சுத்தம் செய்ததன் பின்னர் ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

  • Renault Kwid, Maruti Swift, Verna, i10 போன்ற வாகனங்களில் அரை அடி முதல் முக்கால் அடி ஆழம் வரை உள்ள தண்ணீரில் செல்லலாம்.

  •  SUV-களான Hyundai Creta, Tata Nexon, Scorpio, Bolero போன்ற வாகனம் ஒரு அடி ஆழம் வரை செல்லலாம்.செல்லும் போது மணிக்கு 10-20 கி.மீட்டருக்கு அதிகமாக செல்ல வேண்டும்.


    தண்ணீரை குடைந்துக் கொண்டு சென்றால் ‘ஏர் ஃபில்டர்’ வழியாக தண்ணீர் எஞ்சினுக்குள் வரும்.


    சக்கர உயரத்தில் பாதியளவில் மூடும் வகையில் சென்றால், பிரேக்குகளில் சேறு சகதிகள் சேர்ந்து இருக்கும். ஆகவே பிரேக் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும். 


    தண்ணீரில் செல்லும் போது இன்ஜின் எண்ணெய் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும்.எஞ்சின் ஆயிலில் தண்ணீர் கலந்திருந்தால் நிறம் பால் போன்ற வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். அப்படி ஆகியிருந்தால், அதையும் கவனிக்க வேண்டும்.


    பிரேக்கில் அசாதாரணமான சத்தம் கேட்டால் உடனடியாக பழுது பார்த்துக்கொள்வது நல்லது. 


    ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டர் வகைகளை மழை நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.


    சைலென்சர் நனையாத வகையில் சென்றால் வாகனத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. 


    தண்ணீர் வடிந்த பிறகு சைலென்சர், ஏர் ஃபில்டருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.  


    வாகனம் மழை நீரில் நீண்ட நேரம் நின்றால் தினமும் 30 நிமிடமாவது Start செய்து நின்ற இடத்திலேயே ஓடவிடுவது நல்லது.    
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website