வெள்ளரிக்காய் கொடி வளர்ப்பதற்கான அசத்தலான டிப்ஸ் …!!

October 25, 2022 at 11:43 am
pc

கோடைகாலம் ஆரம்பமானால், வெள்ளரிக்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். ஏனெனில் வெள்ளரிக்காய் கோடைகாலத்தில் அதிகம் விளையக்கூடிய ஒரு காய்கறி. இத்தகைய காய்கறியை கடைகளில் மட்டும் தான் வாங்கி சாப்பிட வேண்டுமென்பதில்லை. வீட்டில் தோட்டம் வைத்திருந்தால், அதனை தோட்டத்திலேயே அழகாக வளர்க்கலாம். மேலும் உலகிலேயே அதிகப்படியாக சாகுபடி செய்வதில் வெள்ளரிக்காய் நான்காவது இடத்தில் உள்ளது.

இத்தகைய வெள்ளரிக்காயை சரியாக வளர்த்து வந்தால், நாம் வீட்டிலேயே வேண்டிய நேரத்தில் சாப்பிட முடியும். சரி, இப்போது அந்த வெள்ளரிக்காயை வீட்டில் வளர்க்க ஆசைப்படுவோருக்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் வளர்த்து மகிழுங்கள்.

  • வெள்ளரிக்காய் கொடிக்கு கோடைகாலம் என்றால் மிகவும் பிடிக்கும் தான். ஆனால் அதனை வளர்க்க வேண்டுமெனில், வசந்த காலத்திலேயே வைத்தால், தான் விதையானது நன்கு வளர்ச்சியடையும். ஏனெனில் வெள்ளரிக்காய்க்கு வெதுவெதுப்பான சூழ்நிலை இருக்க வேண்டும். எனவே அதற்கு வசந்த காலம் தான் சரியாக இருக்கும்.
  • வெள்ளரிக்காய்க்கு சற்று அதிகமான நீர் வேண்டும். அதிலும் குறிப்பாக பூக்கள் விடும் போது, வெள்ளரி கொடிக்கும் அதிகப்படியான நீர் வேண்டும். ஒருவேளை சரியான தண்ணீர் இல்லாவிட்டால், வெள்ளரிக்காயானது கசப்பாக இருக்கும்.
  • வெள்ளரிக்காய் கொடிக்கும் சரியான உரமானது மிகவும் அவசியம். அவ்வாறு கொடுத்தால் தான், வெள்ளரிக்காயிலிருந்து சரியான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.
  • வெள்ளரிக்காய் கொடியிலிருக்கும் இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதற்கு இன்னும் நைட்ரஜன் வேண்டும் என்று அர்த்தம். எனவே அப்போது அந்த கொடிக்கு சற்று அதிகமான இடத்தையோ அல்லது பெரிய தொட்டியிலோ வைக்க வேண்டும்.
  • வெள்ளரிக்காய் கொடியானது பூச்சிகள், காளான்கள், களைகள் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்படும். இவ்வாறு ஏற்படும் போது, அவற்றை சரியான கவனிக்காவிட்டால், அவை வெள்ளரியின் வளர்ச்சியை தடுக்கும். எனவே அவ்வப்போது வெள்ளரிக் கொடியைச் சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இவையே வெள்ளரிக்காயை கொடியை வளர்க்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். வேறு ஏதாவது உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website