வெள்ளைசாதம் அதிகமானால் நமக்கு ஏற்படும் தொந்தரவுகள் என்ன தெரியுமா….?

July 6, 2022 at 12:14 pm
pc
  • வெள்ளை சாதத்தை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். நீரிழிவு நோய் வரும் வாய்ப்பும் உள்ளது.
  • வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு.
  • ஸ்டார்ச் அதிகம். உடலுக்கு அதிகப்படியான ஸ்டார்ச் இருப்பது நல்லதல்ல. என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
  • ஸ்டார்ச் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே வெள்ளை சாதத்தை சாப்பிடாமல், கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுங்கள்.
  • வெள்ளை சாதம் தொப்பையை ஏற்படுத்தும் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு வெள்ளை சாதத்தை தவிர்த்தால் உடல் எடையை குறைக்கலாம்.
  • வெள்ளை சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. கார்போஹைட்ரேட் உடல் எடையை இன்னும் அதிகரிப்பதுடன் மலச்சிக்கலையும் ஏற்படுத்தும்.
  • வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவு என்பதால் முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. இனிமேலாவது வெள்ளை சாதத்தை குறைத்து ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website