வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு கைகொடுக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள் …!!

December 20, 2022 at 7:42 am
pc

பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும். ஆனால் அது அதிகமாக இருக்கும் பெண்களுக்கு அதனால் பிரச்சனை உண்டாகலாம். இதற்கு நீங்கள் உட்கொள்ளும் உணவு ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான பரிசோதனை செய்து உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வெள்ளைப்படுதலால் பெண்கள் உடல் ரீதியாக பல வித பிரச்சனகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது.


அரிப்பு, எரியும் உணர்வு, முதுகில் வலி மற்றும் உடலில் விறைப்பு போன்றவை இதன் காரணமாக வரும் சில பிரச்சனைகளாகும். இந்த பிரச்சனை பொதுவாக மாதவிடாய் முன் ஏற்படுகிறது. எனினும், தினசரி அடிப்படையில் இத்தகைய பிரச்சினைகள் இருந்தால், உடனே ஒரு முறை மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். இந்த பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


வெள்ளைப்படுதலுக்கான காரணம் என்ன?
  • அதிகப்படியான வெள்ளைப்படுதல் உங்கள் உட்புற உடல் பாகங்களில் தொற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
  • மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு அல்லது எப்போதாவது வெள்ளைப்படுதல் இருந்தால், அது இயல்பானது.
  • எனினும், இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு அதன் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சில தொற்றுநோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
  • வெள்ளைப்படுதலுக்கான வீட்டு வைத்தியங்கள்:
  • இந்த பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே சரி செய்ய, மாதுளை சாப்பிடலாம். மாதுளை உடலின் உள் உறுப்புகளை குணப்படுத்த பெரிதும் உதவும் ஒரு பழமாகும்.
  • மேலும் மாதுளை இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து கஷாயம் போல் செய்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
  • கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
  • கொய்யா இலை கஷாயம் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், இந்த பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு நெல்லிக்காய் (ஆம்லா) மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
  • இதில் வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
  • வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனையை சமாளிக்க நெல்லிக்காயை முழுவதுமாக சாப்பிடலாம்.
  • இது உடலுக்கு நன்மை தருவது மட்டுமின்றி கண்பார்வையை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website