வெள்ளை சர்க்கரையை வைத்து முகத்தை இவ்வளவு வெள்ளையாக மாற்ற முடியுமா…?

December 5, 2022 at 7:18 am
pc

முகத்தை வெள்ளையாக மாற்ற பல அழகு குறிப்புகள் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சர்க்கரை மட்டும் இருந்தால் போதும் உங்கள் முகத்தை இத்தனை வெள்ளையாக மாற்ற முடியும் என்ற வார்த்தை கேட்கவே எத்தனை இனிப்பாக இருக்கிறது. மற்ற அழகு குறிப்புகளில் கூறப்படும் பொருள்கள் சில சமயங்களில் நம் வீட்டில் இருக்குமா இருக்காதா என்று தெரியாது. சர்க்கரை எப்போதுமே இருக்க கூடிய ஒரு மிக அத்தியாவசியமான பொருளும் கூட. அந்த சர்க்கரையை வைத்து இப்படி ஒரு எளிமையான அழகு குறிப்பு இருக்கிறது என்றால் சந்தோஷப்படாமல் வேறு என்ன செய்ய முடியும். வாங்க இந்த சர்க்கரையை வைத்து அழகு குறிப்புக்களை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.


அழகுக்காக முகத்தில் எதை போடுவது என்றாலும் அதற்கு முன் முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு கிரீம் அல்லது பேஸ்வாஷ் நிச்சயம் போடத்தான் செய்வோம். நீங்கள் முகத்திற்கு போடும் எந்த கிரீம் அல்லது பேஸ்வாஷ் இருந்தாலும் சரி அதில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து உங்கள் முகத்தை நன்றாக தேய்த்து கழுவி விடுங்கள். இப்போதே உங்கள் முகம் பாதி அளவு பளிச்சென்று மாறியிருக்கும் ஏனெனில் சர்க்கரை முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும் தன்மையுடையது.


அடுத்து முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு சாதாரண தண்ணீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் சர்க்கரை மட்டும் எடுத்து, உங்கள் முகத்தில் தேய்த்து லேசாக ஸ்கிரப் செய்வது போல் மசாஜ் கொடுங்கள். மசாஜ் செய்யும் போது கவனமாக செய்ய வேண்டும். மிகவும் அழுத்தமாக தேய்த்து விட கூடாது லேசாக தேய்த்தாலே போதும். ஒரு ஐந்து நிமிடம் இப்படி தேய்த்தாலே போதும் அதன் பிறகு உங்கள் முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இப்படி செய்வதால் உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி முகம் பார்க்க மென்மையாக இருக்கும்.


இப்போது கடைசியாக முகத்தை வெள்ளையாக மாற்றும் இந்த பேக்கை தயார் செய்து விடலாம். அதற்கு எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், சர்க்கரை ஒரு ஸ்பூன் இது மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.


இந்த பேக் போடும் முன் முகத்தை துடைத்து விடுங்கள். பிறகு இந்த பேக்யை உங்கள் முகம் முழுவதும் தேய்த்து கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் தேய்த்த பிறகு சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அரை மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். உங்கள் முகம் பளிச்சென்று மாறி இருக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீர்கள்.


அழகு நிலையம் செல்லாமலே வீட்டில் உள்ள மிக மிக சாதாரண ஒரு பொருளை வைத்து பத்து ரூபாய் செலவு கூட இல்லாமல், உங்களை அழகுப்படுத்திக் கொள்ள முடியும் என்றால் யோசிக்காமல் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கலாம் தானே.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website