வெஸ்டர்ன் கழிப்பறையால் ஏற்படும் விபரீத விளைவுகள் என்னென்ன …? தெரிஞ்சிக்கலாம் வாங்க ..!!

December 24, 2022 at 12:26 pm
pc

நாகரிக வளர்ச்சியில் பல விதங்களில் கழிப்பறைகள் கட்டத் தொடங்கிவிட்டனர். ஆனால் நமது முன்னோர்கள் உடலின் உடல் கழிவுகளை தேக்கமின்றி வெளியேற்றும் வகையில் கழிவறைகளை அமைத்திருந்தார்கள்.

ஆனால் இன்றோ மேற்கத்திய பாணி கழிவறைகளையே மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இது ஆரோக்கியம் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். கால் மூட்டுகளை மடக்கி அமர்ந்து மலம் கழிக்கும் போது குடலில் இருக்கும் கழிவுகள் ஒதுங்காமல் வெளியேறும்.

மலக்குடலின் வளைவு நேராகி மலம் கழிப்பது எளிதான ஒன்றாகும். ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே இந்த நிலையில் தான் இருக்கும். இதுதான் இயற்கையாக காலைக் கடனை களிக்கும் முறை. இம்முறையில் அமரும்போது இடுப்பு எலும்புகள் பலம்பெறும். தசைகள் வலிமை அடையும்.

மலக்கழிவுகள் வயிற்றில் தங்காத நிலையில் வயிறு உபாதைகள் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது. இயற்கை முறையை மீறிய வெஸ்டர்ன் கழிவறை பயன்படுத்தும் போது மலக்குடலின் இயல்பு வடிவம் பாதிக்கப்படுகின்றது.

மூல நோய், மலச்சிக்கல், குடல் சம்பந்தமான நோய் போன்றவைகள் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம் வாழ்க்கை முறை, உணவு மாற்றம் என்று சொன்னாலும் இயற்கைக்கு மாறான வெஸ்டர்ன் கழிவறைகளும் இதற்கு காரணம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website