வேகவைத்த முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா?

August 1, 2022 at 7:11 am
pc

பொதுவாக முட்டைகளை வேக வைத்து சாப்பிடுவது நல்லது. அதனால் தான் வறுத்த முட்டைகளுக்கு பதிலாக வேக வைத்த முட்டைகளை எடுத்துக் கொள்வகிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் வேக வைத்த முட்டைகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பாதுகாப்பது உண்டு. அப்படி வேக வைத்த முட்டைகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எத்தனை நாளைக்கு பாதுகாக்கலாம். எத்தனை நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதை பற்றி தான் நாம் காணப் போகிறோம்.

வேகவைத்த முட்டையை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாமா?

வேக வைத்த முட்டைகளை பாதுகாக்க நினைத்தால் நீங்கள் அவற்றின் ஓட்டை நீக்காமல் இருப்பது நல்லது.

காரணம் மேலே உள்ள ஓடு பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்க உதவுகிறது. மேலும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வரும் மற்ற நாற்றங்களை முட்டைகள் உறிஞ்சாமல் இருக்கும்.

வேக வைத்த முட்டைகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 7 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.

எனினும் முட்டை புதியதாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே முட்டையை வாங்கி நீண்ட நாட்கள் வைத்திருந்து பிறகு அதை வேகவைத்து மீண்டும் 7 நாட்கள் வைத்து சாப்பிட கூடாது. முட்டை ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும்.

​வேக வைத்த முட்டைகள் அறைவெப்பநிலையில் எவ்வளவு நேரம் வைக்கலாம்?

வேக வைத்த முட்டைகளை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்து இருந்தால் கிருமிகள் விரைவாக வளர வாய்ப்பு உள்ளது. 2 மணி நேரத்துக்கு குறைவாகவே வெளியில் வைத்து இருங்கள்.

இதுவே பிரிட்ஜில் வேக வைத்த முட்டைகளை சேமித்து வந்தால் ஒரு வாரம் காலம் வரை சேமிக்கலாம்.​

​எப்பொழுது வேக வைத்த முட்டையை சாப்பிடக் கூடாது

அழுகிய முட்டைகளை சாப்பிடுவது உங்களை நோய் தாக்குதலுக்கு ஆளாக்க வாய்ப்பு உள்ளது.

முட்டைகளை பயன்படுத்துவதற்கு முன்பே அது நல்ல முட்டையா என்பதை கண்டறிய வேண்டும். தண்ணீரில் மிதந்தால் அது கெட்டுபோன முட்டையின் அறிகுறியாக இருக்கலாம்.

எனினும் கவனிக்காமல் முட்டையை வேக வைத்தால், முட்டைகளை எடுப்பதற்கு முன்பு அதன் ஓட்டை பரிசோதிக்க வேண்டும்.

பிறகு ஓட்டை பிரித்து முட்டை ஏதேனும் கெட்ட வாசனையை தருகிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.

சில முட்டைகள் அழுகிய கந்தக வாசனையை வெளிப்படுத்தினால் அந்த முட்டைகளை சாப்பிடக் கூடாது. மேலும் அழுகிய முட்டையுடன் மற்ற முட்டைகளை வேகவைத்திருந்தால் அதையும் தவிர்ப்பது நல்லது.

​முட்டைகளை வேக வைப்பது எப்படி?

முட்டைகளை வேக வைக்கும் போது நாம் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினை மஞ்சள் கருவைச் சுற்றி ஆழமான பச்சை நிற வளையம் ஏற்படுகிறது. இது கந்தக சுவையை முட்டைக்கு அளிக்கிறது.

இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட வழி முறைகளை பின்பற்றுங்கள். முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போதுமான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும் குறைந்த பட்சம் முட்டைகள் ஒரு அங்குல தண்ணீரால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்கும் போது முட்டையின் வெள்ளைக் கரு உடைந்து வெளியேறினால் அதில் சிறிதளவு வினிகர் சேர்த்து கொள்ளுங்கள்.

10-12 நிமிடங்கள் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடுங்கள். இப்பொழுது முட்டைகளை குளிர்ந்த நீரில் போட்டு அதன் ஓடுகளை கவனமாக அகற்ற வேண்டும்.

இப்பொழுது வேக வைத்த முட்டைகளை காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது முட்டையில் இருந்து நாற்றம் வீச வாய்ப்பு இருந்தால் அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website