வேலை தேடும் பெண்களை குறிவைத்து பிளிப்கார்ட் ஊழியர் செய்த கொடூரம்!அதிர்ச்சி..

February 22, 2023 at 9:18 pm
pc

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச வீடியோ அனுப்புவதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது மும்பையை சேர்ந்த மன்சூலே என்று தெரியவந்தது. மேலும் 27 வயதுடைய இந்த இளைஞர் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை விரைந்து கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, மன்சூலேவின் பெற்றோர் இவரது சிறுவயதிலேயே இறந்து விட்டனர். இதனால் இவர் தனது பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர் தனது சகோதரர்களுடன் புனேவில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளார்.

தொடர்ந்து தற்போது பகுதி நேர வேலையாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி பாயாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் ஆர்வம்காட்டும் இவர், பெண்களை குறிவைத்து பல்வேறு காரியங்களை செய்து வந்துள்ளார். குறிப்பாக ஃபேஸ்புக்கில் உள்ள வேலை தேடும் குரூப்பில் இணைந்து, வேலை தேடும் பெண்களின் சமூக வலைதள கணக்குகளை கண்டுபிடித்துள்ளார்.

பின்னர் அந்த குழுக்களில் இருக்கும் பெண்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களை தொடர்பு கொண்டுள்ளார். அதோடு அவர்களுடன் வேலை குறித்து பேசுவதாக கூறி தனது பேச்சுக்களை தொடர்ந்து பின்னர் ஆபாசமாக பேசியுள்ளார். இதில் சிலரது வாட்சப் எண்களை பெற்று அதிலும் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். மேலும் அவர்களிடம் அவதூறாக பேசி, ஆபாச வீடியோக்களும் அனுப்பி வந்துள்ளார். அதோடு சிலரிடம் வீடியோ கால் மூலமும் பேசி வந்துள்ளார். இவ்வாறு கால் பேசும்போது, சில பெண்கள் காலை கட் செய்தால், அவர்களை மிரட்டியும் வந்துள்ளார்.

அதோடு இதனால் தான் ஒரு வித சந்தோசத்தை அனுபவித்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் இவர் சுமார் 40 பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலை தேடும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி, அதில் மகிழ்ச்சி கண்ட மும்பையில் பிளிப்கார்ட் டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website