வைட்டமின் சி குறைப்பாட்டின் முக்கிய அறிகுறிகள் இதுதான்.. உங்களுக்கு இருக்கா செக் பண்ணுங்க!

August 23, 2022 at 10:42 am
pc

வைட்டமின் சி குறைபாட்டால் பற்களில் இரத்தக் கசிவு, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகுதல், உடல் எடை அதிகரிப்பு, வறண்ட மற்றும் 

வைட்டமின் சி உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி தான் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலத்துடன் வைக்க உதவுகிறது. இது ஜலதோஷம், இதய நோய்கள், கண் கோளாறுகள், சரும சுருக்கங்கள் போன்றவற்றை எதிர்த்து போராட உதவுகிறது. எனவே வைட்டமின் சி குறைபாடு என்பது ஏகப்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது. எனவே ஒவ்வொரு வரும் போதுமான அளவு வைட்டமின் சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி குறைப்பாட்டினால் சரும பாதிப்பு

வைட்டமின் சி தான் கொலாஜன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது சருமம், முடி, மூட்டுகள், எலும்புகள் மற்றும் இரத்த நாளங்கள் போன்ற இணைப்புத் திசுக்களில் காணப்படும் புரதங்களை பாதிக்கிறது.

கெரடோசிஸ் பிலாரிஸ் எனப்படும் தோல் நிலை உருவாகலாம். அதாவது இந்த நிலையில் கெரோட்டின் புரதம் மேல் கைகள், தொடைகள் அல்லது பிட்டப் பகுதியில் படிவதால் சருமத்தில் கோழி தோல் போன்ற செதில்கள் உருவாகிறது. 

மேலும் வைட்டமின் சி குறைபாடுகள் கைகள், தொடைகள், பிட்டங்களில் சிறிய முகப்பரு புடைப்புகளை உண்டாக்கலாம். 

​வைட்டமின் சி குறைபாட்டினால் தோலின் மேல் சிவப்பு நிற முடிகள்

நமது தோலின் மேற்பரப்பில் உள்ள மயிர்க்கால்களில் பல சிறிய இரத்த நாளங்கள் காணப்படும். அவை தான் மயிர்க்கால்களுக்கு இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உடலில் வைட்டமின் சி குறைபாடு இருந்தால் சிறிய இரத்த நாளங்கள் உடைந்து மயிர்க்கால்களை சுற்றி சிவப்பு புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். இது பெரிஃபோலிகுலர் ரத்தக்கசிவு என்று அழைக்கப்படுகிறது. இது கடுமையான வைட்டமின் சி குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

வைட்டமின் சி குறைபாடு முடி வளர்ச்சியில் உள்ள புரத அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வளைந்து சுருண்டு வடிவங்களில் முடி வளர ஆரம்பிக்கும். இப்படி சேதமடைந்த முடிகள் உடைந்து உதிர்ந்து விட ஆரம்பிக்கும்.

எனவே வளைந்து சுருண்ட வடிவில் முடி காணப்படுவது வைட்டமின் சி பற்றாக்குறையாகும். 

​வைட்டமின் சி குறைபாட்டால் விரல் நகங்கள் ஸ்பூன் வடிவில் காணப்படுதல்

வைட்டமின் சி குறைப்பாட்டால் நகங்கள் வளைந்து அவை ஸ்பூன் வடிவில் காணப்படும் போது அவை பெரும்பாலும் மெல்லியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறுகிறது. பொதுவாக இரும்புச் சத்து குறைபாடு நமக்கு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. வைட்டமின் சி குறைபாடு காரணமாக நகங்களில் இரத்தக் கசிவு மற்றும் சிவப்பு புள்ளிகள் தோன்றும். 

​வைட்டமின் சி குறைபாடு உலர்ந்த மற்றும் சேதமடைந்த சருமம்

ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் சி என்பது அவசியமான ஒன்று. வைட்டமின் சி சூரியனால் ஏற்படும் ஆக்ஸினேற்ற சேதத்தில் இருந்து சருமத்தை காக்க உதவுகிறது. இது சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. வைட்டமின் சி குறைப்பாட்டால் வறண்ட சருமம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். 

​வைட்டமின் சி குறைபாடு சிராய்ப்பு ஏற்படுத்துகிறது

தோலின் கீழ் உள்ள இரத்த நாளங்கள் உடைந்து இரத்தம் கசியும் போது சிராய்ப்பு ஏற்படுகிறது. குறைந்த கொலாஜன் உற்பத்தி பலவீனமான இரத்த நாளங்களை ஏற்படுத்துவதால் சிராய்ப்பு உண்டாகிறது. இது வைட்டமின் சி குறைப்பாட்டால் ஏற்படுகிறது. தோலின் கீழ் சிறிய ஊதா நிற புள்ளிகள் தோன்றலாம். 

​வைட்டமின் சி குறைபாடு காயங்களை மெதுவாக குணப்படுத்துகிறது

வைட்டமின் சி குறைபாடு கொலாஜன் உற்பத்தியை குறைப்பதால் காயங்கள் மெதுவாக குணமாகிறது. நாள்பட்ட குணமடையாத கால் புண்கள் உள்ளவர்கள், நாள்பட்ட கால் புண்கள் இல்லாதவர்களைக் காட்டிலும் வைட்டமின் சி குறை பாட்டுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 

வைட்டமின் சி குறைபாடு ஈறுகளில் இரத்த போக்கு மற்றும் பல் இழப்பு

சிவந்து போதல், வீக்கம், ஈறுகளில் இரத்த போக்கு போன்றவை வைட்டமின் சி குறைப்பாட்டின் பொதுவான அறிகுறியாகும். வைட்டமின் சி குறைப்பாட்டால் ஈறுகளில் உள்ள திசுக்கள் வலுவிழந்து வீக்கமடைகிறது. 

இதனால் இரத்த நாளங்களில் இருந்து இரத்தம் எளிதாக கசிய ஆரம்பிக்கிறது. வைட்டமின் சி குறைப்பாட்டால் ஈறுகள் ஊதா நிறமாகவும், அழுகியதாகவும் மாறக் கூடும். இதனால் ஆரோக்கியமற்ற ஈறுகள் மற்றும் பலவீனமான டென்டின், பற்களின் கால்சிஃபைட் உள் அடுக்கு இவற்றால் பற்கள் உதிர ஆரம்பிக்கும். 

​வைட்டமின் சி குறைபாடு மோசமான நோயெதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி தான் நோயெதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராட உதவுகிறது. வைட்டமின் சி குறைபாடு நோயெதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு, நிமோனியா போன்ற கடுமையான நோய்த்தொற்றுக்களை உண்டாக்குகிறது. இது ஸ்இது ஸ்கர்வி போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website